“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.

Saturday, 20 August 2016

UAE நாகூர் சகோதரர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம்.

நாகூர் நண்பர்கள் பொதுநல சங்கம் (NFWA) நடத்திய  UAE  நாகூர் நண்பர்கள் சந்திப்பு 
மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று (19-08-2016 )சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சி 19-08-2016 மாலை 5:00மணிக்கு தொடங்கியது.சகோ.கௌஸ் கிராத் ஓதி தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சியை சகோதரர் ஃபரிஜால் தொகுத்து வழங்கினார்.
பிறகு சகோதரர்.அஜீஸ் அஹமது அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்கள். அதை தொடர்ந்து NFWA வின் பொறுப்பும், பொதுநலனும் என்ற தலைப்பில் சகோதரர் அனீஸ் அஹமது NFWA பற்றி விரிவாக விளக்கி பேசினார்.

இதன் தொடர்ச்சியாக மார்க்துறைமுகமும் – நாகூரும் என்ற தலைப்பில் சகோதரர் நாசிக் அவர்கள் மிக ஆணித்தரமாக பல கருத்துக்களை முன்வைத்து விளக்கி பேசினார்.

அடுத்து இந்நிகழ்ச்சிக்கு  வந்திருந்த சகோதரர்கள் அனைவரும் பல கேள்விகளையும்  & ஆலோசனைகளையும் பதிவு செய்தார்கள். அதில் சில முக்கிய ஆலோசனைகள் உங்கள் பார்வைக்கு.

*   NFWA செயல்பாடுகள் பல நாகூர் சகோதாரர்களுக்கே தெரியவில்லை. அதை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும். குறைந்தது ஆறுமாதத்திற்கு ஒருமுறையாவது NFWA நாகூர் சகோதரர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை UAEல் நடத்தவேண்டும்.

 வேலை தேடி UAE வரக்கூடிய  நாகூர் சகோதரர்களுக்கு  NFWA வழிகாட்டியாக  செயல்பட்டு வேலைவாய்ப்பை பெற உதவி செய்ய  வேண்டும்.

வேலை தேடி UAE வரக்கூடிய  நாகூர் சகோதரர்களுக்கு உதவியாக NFWA சர்பாக  BED SPACE அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

NFWA ஒரு பொதுவான அமைப்பாக இருக்கும்போது ஏன் அனைத்து பள்ளிவாசல்  ஜமாத்திற்கும் தெரியபடுத்தி ஒரு தொடர்பை ஏற்படுத்திகொள்ள கூடாது. அவர்கள் மூலமாகவும் NFWA விண்ணப்பங்களை பெற்று உதவி செய்யலாமே , இதன் மூலம்  ஒரே நபர் இரு இடங்களில் உதவி பெறுவதையும்  தடுக்க முடியும்.

பட்டபடிப்பு , பொறியியல் படிப்பிற்கு NFWA உதவுவதே போன்று ஆலிம்களாக மார்க்ககல்வி கற்க  விரும்பும் மாணவர்களுக்கும் உதவ முன்வர வேண்டும்.

NFWA ஒரு பொதுவான அமைப்பு தான் என்றாலும் , NFWA தெற்கு தெரு முஹல்லாவாசிகளுக்குள் நடந்துவரும் அமைப்பு போன்ற தோற்றம் உள்ளது அதை மாற்றவேண்டும்.

வெளிநாட்டில் வந்து வேலைதேடுபவருக்கு உதவுவது போன்று , இந்தியாவில் வேலைதேடும் சகோதரர்களுக்கும் NFWA உதவி செய்ய முன்வர வேண்டும்.

 நாகூர் கடற்க்கரை குப்பையாக காட்சியளிக்கிறது அதற்கு NFWA நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆகிய எண்ணற்ற கருத்துக்களை பல சகோதரார்கள் முன்வைத்தார்கள்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சகோதரர் ஃபரிஜால் வாசித்து காட்டினார்.
தீர்மானங்கள்

1.      UAEயில் உள்ள  நாகூர் சகோதாரர்கள் அனைவருக்கும் NFWA பற்றியும் , அதன் செயல்பாடுகள் பற்றி தெரியபடுத்துவது.
2.      NFWA விற்கு நிலையான மாத வருவாய் வரும்படி UAE நாகூர் சகோதரர்கள் மூலமாக மாத சந்தாக்களை வசூலிப்பது.
3.      இன்ஷாஅல்லாஹ் ஆண்டுக்கு ஒருமுறையோ , இருமுறையோ UAEல் நாகூர் சகோதரர்கள் அனைவரும் ஒன்றுகூடி சந்தித்து கொள்ளும் வழக்கத்தை கொண்டுவருவது.
4.      NFWA அலுவலகத்திற்கு முழுநேர பொறுப்பாளரை மாத சம்பள அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுப்பது.
5.      விரைவில் NFWA சங்கத்தை முறைப்படி ரெஜிஸ்டர் செய்து. வங்கி கணக்கு துவங்குவது.
6.      நாகூரில் NFWAவிற்கு தன்னார்வ உறுப்பினர்களை அதிக அளவில் இணைக்க UAE உள்ள சகோதரர்களை கொண்டு முயற்சிகள் மேற்கொள்வது.

இறுதியாக சகோ.அஸ்கர் அலி அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது. NFWA அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு வருகை தந்த சகோதரர்கள் அனைவருக்கும் ஜசாகல்லாஹைரன்.

இந்த சந்திப்பு பலவகையில் பயனுள்ளதாக அமைந்தது. இன்ஷாஅல்லாஹ் NFWA பொறுப்புடனும் , பொதுநலத்துடனும் இன்னும் வீரியாமாக சமூக பணிகளை விரிவுபடுத்தி அல்லாஹ்வின் உதவியால் செயலாற்றும் என்று தெரிவித்துகொள்கிறோம்.

எல்லா புகழும் இறைவனுக்கே...

9 comments:

  1. Ma Shaa allah.. Good effort..

    ReplyDelete
  2. Ma Shaa allah.. Good effort..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Nalla muyarchi.
    Vaalthukkal.
    Raja Dk.
    KL

    ReplyDelete
  5. Nalla muyarchi.
    Vaalthukkal.
    Raja Dk.
    KL

    ReplyDelete
  6. NFWA என்ற அமைப்பு எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றே ஆணித்தரமாக ஒரு கருத்தை மிகவும் வலியுறுத்தி பதிந்தோம். அது என்னவென்றால் மார்க்க விசயங்களில் குறிப்பாக கொள்கை விசயங்களில் NFWA தன்னை ஈடுபடித்த கூடாது என்பதை வலியுறுத்தினோம் . NFWA என்பது குறிப்பிட்ட கொள்கை கோட்பாடுகளின் வழிநடத்தலின் படி செயல்பட கூடிய அமைப்பு அல்ல என்றும், கொள்கை கோட்பாடுகளை தாண்டி இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும் சமூக மேம்பாட்டு, கல்வி, மருத்துவம், மனித நேய உதவிகள் போன்றவைகளை செயல்படுத்தும் ஒரு பொதுவான அமைப்பு என்று தான் என்னை போன்றோர்கள் விளங்கி வைத்திரிக்கிறோம்.

    துபாய் Nfwa கூட்டத்தில் ஆலிம்களாக மார்க்க கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு உதவுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நன்மையான கருத்து என்பதில் மாற்று கருத்து இல்லை.

    எந்த அகீதா? கொள்கை சார்ந்த ஆலிம் மாணவர்கள் என்பதில் எல்லோரும் ஒருமித்த கருத்து இருக்க முடியாது. மார்க்க விசயங்களை ஊக்குவிக்க வேறு அமைப்புகளும் இயக்கங்களும் செயல்படுகின்றன என்பதை கவனத்தில் கொண்டு , நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை NFWA நிர்வாக சகோதர்ர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

    NFWA கொள்கை தொடர்பாக சில ஐயங்களை முன்வைத்துள்ளீர்கள். அதாவது NFWA ஆலிம் படிக்க உதவி செய்யும் என்றால் எந்த அகீதா அடிப்படையில் முடிவெடுக்கும். இது NFWA உடைய கொள்கைகளுக்கு முரணாக வருகிறதே எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.

    முதலில் இந்த அறிவுரைகளை வரவேற்கிறோம்.இது சம்மந்தமாக சில விசயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இது இக்கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட வில்லை.

    ஆகஸ்ட் 19ம் தேதி நடந்த துபாய் சந்திப்பில் ஆலிம் படிக்க ஏன் உதவி செய்ய கூடாது என்ற கேள்வியை ஒரு சகோதரர் முன்வைக்கும்போது , ஆலீம் படிக்க உதவி செய்ய கூடாது என்ற நிலையில் நாங்கள் இல்லை. பொருளாதார கஷ்டத்தில் ஒருவர் ஆலிம் படிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் என்று உதவி கேட்டால் அவருக்கு nfwa உதவி செய்யும் ஆனால் அவர் எந்த மதரசாவில் படிக்க வேண்டும், படிக்க கூடாது என்பதை நாங்கள் தீர்மானிக்க மாட்டோம் அதில் தலையிட மாட்டோம் அது அவர்கள் விருப்பம் தான் என்று பதிலளித்தோம். மேலும் இந்த முடிவு NFWA புதிதாக எடுத்த நிலைப்பாடு இல்லை. Nfwa தொடங்கப்பட்ட போதே எடுத்த நிலைப்பாடு தான். Nfwa பைலாவில் நீங்கள் இதை காணலாம். இருப்பினும் NFWA விடம் இதுவரை யாரும் மார்க்க கல்வி கற்க உதவி கேட்டு வந்ததில்லை, நாங்களும் செய்ததில்லை என்பதை இவ்வேளையில் தெரிவித்து கொள்கிறோம். எனினும் எல்லாவற்றிலும் பொதுவான நிலைப்பாட்டில் இருக்கும் nfwa இதில் தலையிட தேவையில்லையே , இதற்காக உதவி செய்ய நிறைய அமைப்பு உள்ளதே என்ற உங்கள் பார்வையை மதிக்கிறோம்.

    எந்த வகையிலும் கொள்கை வேறுபாடு பார்க்க கூடாது என்பதில் NFWA சகோதரர்களான நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.(உங்களையும் சேர்த்து தான் 😊)

    இந்நிலைபாடு 2013 முதல் பைலாவில் இருக்கிறது.
    பைலாவும் மாற்றத்திற்கு உட்பட்டது தான். இன்ஷாஅல்லாஹ் நீங்கள் சொன்னது போல் இது தொடர்பாக பரிசீலனை செய்து முடிவெடுப்போம்.

    ஜசாக்கல்லாஹ்

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)