“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.

NFWA பற்றி

NFWA என்ற பொதுநல சங்கம் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாகூர் நண்பர்கள் சிலரின் முயற்சியால் தொடங்கப்பட்ட  ஓர் பொதுநல சங்கமாகும்.

இந்த அமைப்பு நம் ஊர் , நம் மக்கள் , நம் எதிர்காலம் என்ற பரந்த சிந்தனையுடனும் , பொது பார்வையுடன் செயல்பட்டு வருகின்றது. நாகூரில் உள்ள தேவையுடைய நம் மக்களுக்கு கல்வி உதவி ,  மருத்துவ உதவி , தொழில் உதவி என்று அனைத்து வகையிலும் இந்த அமைப்பின் மூலமாக அல்லாஹ்வின் உதவியால் எங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்து வருகின்றோம்.  அல்லாஹ்விற்கே அனைத்து புகழும்.

நம் ஊரில் நம் கண்முன்னே கஷ்டப்படும் நம் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வதில் கிடைக்கும் உளப்பூர்வமான மகிழ்ச்சியும் , இன்ஷாஅல்லாஹ் கிடைக்க பெரும் மறுமை கூலியும் மனநிறைவை தருகிறது. 

ஊர் சகோதரர்கள் பலர் NFWA பணிகளுக்காக தங்கள் பொருளாதாரத்தையும் , ஆலோசனைகளையும்  தொடர்ந்து வழங்கி நற்பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செய்துவர உறுதுணையாக இருக்கிறார்கள்  என்றால் அது மிகையாகாது.
அந்த சகோதரர்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் கிருபைசெய்வானாக ,அவர்களின் செல்வத்தை அபிவிருத்தி செய்வானாக..   ஆமீன்.

NFWA எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதிலிருந்து பிறலாது , நற்பணிகளை மறுமைகூலியை இலக்காக கொண்டு தொடர்ந்து செயல்பட்டுவரும் இன்ஷால்லாஹ்...

உங்கள் ஆதரவை இன்று போல் என்றும் எதிர்பார்க்கிறோம்...

ஜசாகல்லாஹைரன்.



No comments:

Post a Comment