“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.

பணிகள்


NFWA கீழ்காணும் பணிகளை செய்துவருகிறது. 

கல்வி உதவி :

நமதூரில் குடும்பவறுமையின் காரணமாக பலர் பள்ளிப்படிப்பை அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தும் சூழலுக்கு தள்ளபடுவதை பார்க்க முடிகிறது. எனவே NFWA கல்விக்கு முன்னுரிமை கொடுத்து கல்விஉதவிகளை அதிகமாக செய்துவருகிறது.

நம் ஊரில் எந்த ஒரு மாணவனின் படிப்பும் குடும்ப வறுமையின் காரணமாக தடைபட்டுவிட கூடாது என்ற இலக்கை  நிர்ணயம் செய்துகொண்டு NFWA செயல்பட்டுவருகிறது.

அதைபோல் ஆண்கள் இல்லாத வறுமையான குடும்பங்களில் உள்ள பெண் பிள்ளைகள் பள்ளி , கல்லூரி படிப்பை முடித்து குடும்பத்திற்காக கட்டாயமாக வேலைக்கு போகவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட மாணவிகளுக்கு அவர்கள் குடும்ப எதிர்காலத்தை கருத்தில் கொண்டு NFWA கல்விக்கான உதவிகளை செய்துவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி :

NFWA நம் ஊரில் உள்ள ஏழ்மையான மக்களின் மருத்துவ செலவுகளையும் கவனத்தில் கொள்கிறது. நோயினால் ஒருபுறம் வேதனைகளை அனுபவித்து வருகிறார்கள் , மறுபுறம் அதற்க்கு சிகிச்சை அளிக்க பொருளாதாரம் இல்லாததால் மனஉளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்  எனவே அவர்கள் துயர் துடைக்கும் முகமாக NFWA இயன்றவரை மருத்துவ உதவி செய்துவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

தொழில் உதவி :

போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் சகோதரர்களுக்கு தொழில் தொடங்க NFWA உதவி செய்துவருகிறது. தொழில் உதவிகள் பொருத்தவரை சம்மந்தபட்டவரின்  ஆர்வம் , கடந்தகால தொழில் ஈடுபாடு ஆகியவைகளை கவனத்தில் கொண்டு தேவைப்படும் நபர்களுக்கு உதவிகள் செய்யபடுகிறது.

மேலும் பல காலமாக தொழில் செய்துவருபவர்களுக்கு தீடீர் இழப்பு, கஷ்டம் ஏற்படும்போது அவர்களின் வாழ்வாதாரம் முடங்காமல் இருப்பதற்கு உண்டான உதவிகளை NFWA முடிந்தவரை செய்துவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்



No comments:

Post a Comment