“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.

நன்கொடை

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)சகோதரர்களே...,

நம் ஊரில் , நம் கண்முன்னே  நம் சகோதர, சகோதரிகள் பலர் பலவகையான பொருளாதார நெருக்கடியில்    வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .  பொருளாதார நெருக்கடியில்  தன் பிள்ளைகளை படிக்கவைக்க முடியாமல் , பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் நிலையை பார்க்கிறோம் .. , மேலும் நோய் நொடிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள், போதிய வருமானம் இல்லாமலும் , தொழில் நஷ்டம் ஏற்பட்டும்  வறுமையில் குடும்பங்கள் வாடுவதை பார்க்க முடிகிறது.  சிலர்  உதவி வேண்டி வெளிப்படையாக கேட்கிறார்கள் , சிலர் வெட்கப்பட்டுகொண்டு தயங்குவதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது...

எனவே இது போன்ற மக்களின் பொருளாதார  கஷ்டங்களை கவனத்தில்கொண்டு இந்த அமைப்பின் மூலமாக  கல்வி உதவிகள்  , மருத்துவ உதவிகள்  , தொழில் உதவிகள் என பல உதவிகள் எங்களால் முடிந்தஅளவிற்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் செய்துவருகிறோம். அல்லாஹ்விற்கே அனைத்து புகழும்..இந்த பணிகள்  தொய்வின்றி தொடர்ந்து நடைபெற வேண்டுமெனில் அதற்க்கு நம் ஊர் சகோதரர்களான உங்களின் பொருளாதார பங்களிப்பு மிக அவசியமானது. NFWA தொடங்கப்பட்டதிலிருந்தே நாகூர் சகோதரர்கள்  பலர் தங்கள் பொருளாதாரத்தை தொடர்ந்து வழங்கி ஆதரவு தந்துகொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹ் அவர்களின் செல்வதை அபிவிருத்தி செய்வானாக..

எனவே நாகூர் சகோதரர்களான உங்கள் அனைவருக்கும்  NFWAவின் அன்பான வேண்டுகோள் என்ன வென்றால்...,

இந்த அமைப்பிற்கு என்று நிரந்தர வருமானம் ஏதும்  இல்லை. உங்களின் பொருளாதார பங்களிப்பை பெரிதும் நம்பி தான் NFWA செயல்பட்டுகொண்டிருக்கிறது. NFWA பணிகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால் பொருளாதார தேவை அதிகரித்துள்ளது. ஆகவே  NFWAவிற்க்காக  மாத சந்தா வழங்கும்  சகோதாரர்கள் தொடர்ந்து வழங்கும்படி கேட்டுகொள்வதோடு..  மேலும் நாகூர் வாழ் சகோதரர்கள் அனைவரும்  NFWAவுடன் தங்களை இணைத்துகொண்டு ,பொருளாதார பங்களிப்பை  வழங்கி நற்பணிகள்  தொடர்ந்து நடைபெற  உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். இன்ஷாஅல்லாஹ் இதற்கான மகத்தான கூலியை அல்லாஹ் நம் அனைவருக்கும் மறுமையில் வழங்குவான்.  

நீங்கள் வழங்கக்கூடிய பொருளாதாரம் அல்லாஹ்விற்கு பயந்து  உரிய முறையில் கணக்கு வைக்கப்பட்டு ,வங்கிக்கணக்கில் டெபொசிட் செய்யப்பட்டு பிறகு தேவையுடைய மக்களுக்கு வழங்கபடுகிறது.  மேலும் NFWA பணிகள் குறித்து ஒவ்வொரு மாதமும்  வரவு /செலவு விபரம் வெளியிடப்படுகிறது. அனைத்து தகவலும் முகநூலிலும், இணையத்தளத்திலும் வெளியிடப்படுகிறது. இந்த அமைப்பு தொடர்ந்து சிறப்பாக செயல்பட உங்களின் பங்களிப்பையும் , கருத்துகளையும் , ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். இன்ஷாஅல்லாஹ் NFWA பணிகள் தொடர்ந்து  நடைபெற சகோதரர்கள் அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.



2 comments:

  1. Qatar code :00974- mob:50403450




    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும் ...

      சகோதரரே உங்கள் மொபைல் எண் கொடுத்துள்ளீர்கள் , நீங்கள் நன்கொடை கொடுக்க விரும்புகிறீர்களா?.. உங்களை தொடர்பு கொள்ளலாமா ..

      Delete