“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.
Friday, 9 December 2016
Saturday, 5 November 2016
Saturday, 15 October 2016
சட்டப்படிப்பு (LAW) படிக்க விருப்பம் உள்ளவர்களை அழைக்கிறது - NFWA
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).
நாகூரை சார்ந்த சகோதரர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.
நாகூரில் உள்ள மாணவர்கள், ஆர்வம் உள்ள சகோதரர்கள் சட்டப்படிப்பு(law) படிக்க விரும்பினால் அதற்கான வழிகாட்டுதலை NFWA வழங்கும்.
மேலும் சட்டப்படிப்பு (law) படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் யாரேனும் பொருளாதார வசதியில்லாமல் இருந்தால், அவர்கள் NFWA வை அணுகலாம். இன்ஷாஅல்லாஹ் அவர்களுடைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சட்டபடிப்பிற்கு உண்டான செலவை NFWA பொறுப்பேற்று கொள்ளும் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம்.**
**நாகூரை சார்ந்த சகோதரர்களுக்கு மட்டும்.
சட்டத்துறையில் நம் மக்கள் அதிகம் கவனம் செலுத்தி சிறந்த ஆளுமைகளை பெற வேண்டும். வளரும் நம் இளம் தலைமுறைகளை அதிகாரமிக்கவர்களாக வார்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
📌இது சம்மந்தமாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
நாகூரை சார்ந்த சகோதரர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.
நாகூரில் உள்ள மாணவர்கள், ஆர்வம் உள்ள சகோதரர்கள் சட்டப்படிப்பு(law) படிக்க விரும்பினால் அதற்கான வழிகாட்டுதலை NFWA வழங்கும்.
மேலும் சட்டப்படிப்பு (law) படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் யாரேனும் பொருளாதார வசதியில்லாமல் இருந்தால், அவர்கள் NFWA வை அணுகலாம். இன்ஷாஅல்லாஹ் அவர்களுடைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சட்டபடிப்பிற்கு உண்டான செலவை NFWA பொறுப்பேற்று கொள்ளும் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம்.**
**நாகூரை சார்ந்த சகோதரர்களுக்கு மட்டும்.
சட்டத்துறையில் நம் மக்கள் அதிகம் கவனம் செலுத்தி சிறந்த ஆளுமைகளை பெற வேண்டும். வளரும் நம் இளம் தலைமுறைகளை அதிகாரமிக்கவர்களாக வார்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
📌இது சம்மந்தமாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
Monday, 3 October 2016
Tuesday, 6 September 2016
Saturday, 20 August 2016
UAE நாகூர் சகோதரர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம்.
நாகூர்
நண்பர்கள் பொதுநல சங்கம் (NFWA) நடத்திய UAE நாகூர் நண்பர்கள் சந்திப்பு
மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று (19-08-2016 )சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சி
19-08-2016
மாலை 5:00மணிக்கு தொடங்கியது.சகோ.கௌஸ் கிராத்
ஓதி தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சியை சகோதரர் ஃபரிஜால் தொகுத்து வழங்கினார்.
பிறகு
சகோதரர்.அஜீஸ் அஹமது அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
அதை தொடர்ந்து NFWA
வின் பொறுப்பும், பொதுநலனும் என்ற தலைப்பில் சகோதரர்
அனீஸ் அஹமது NFWA பற்றி விரிவாக விளக்கி பேசினார்.
இதன்
தொடர்ச்சியாக மார்க்துறைமுகமும் – நாகூரும் என்ற தலைப்பில் சகோதரர் நாசிக் அவர்கள்
மிக ஆணித்தரமாக பல கருத்துக்களை முன்வைத்து விளக்கி பேசினார்.
அடுத்து
இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சகோதரர்கள்
அனைவரும் பல கேள்விகளையும் & ஆலோசனைகளையும்
பதிவு செய்தார்கள். அதில் சில முக்கிய ஆலோசனைகள் உங்கள் பார்வைக்கு.
* NFWA செயல்பாடுகள்
பல நாகூர் சகோதாரர்களுக்கே தெரியவில்லை. அதை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
குறைந்தது ஆறுமாதத்திற்கு ஒருமுறையாவது NFWA நாகூர் சகோதரர்களின் சந்திப்பு
நிகழ்ச்சியை UAEல் நடத்தவேண்டும்.
* வேலை தேடி UAE வரக்கூடிய நாகூர் சகோதரர்களுக்கு NFWA வழிகாட்டியாக செயல்பட்டு வேலைவாய்ப்பை பெற உதவி செய்ய வேண்டும்.
* வேலை தேடி UAE வரக்கூடிய நாகூர் சகோதரர்களுக்கு உதவியாக NFWA சர்பாக BED SPACE அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
* NFWA ஒரு
பொதுவான அமைப்பாக இருக்கும்போது ஏன் அனைத்து பள்ளிவாசல் ஜமாத்திற்கும் தெரியபடுத்தி ஒரு தொடர்பை
ஏற்படுத்திகொள்ள கூடாது. அவர்கள் மூலமாகவும் NFWA விண்ணப்பங்களை பெற்று உதவி
செய்யலாமே , இதன் மூலம் ஒரே நபர் இரு
இடங்களில் உதவி பெறுவதையும் தடுக்க
முடியும்.
* பட்டபடிப்பு
, பொறியியல் படிப்பிற்கு NFWA உதவுவதே போன்று ஆலிம்களாக மார்க்ககல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கும் உதவ முன்வர
வேண்டும்.
* NFWA ஒரு
பொதுவான அமைப்பு தான் என்றாலும் , NFWA தெற்கு தெரு முஹல்லாவாசிகளுக்குள்
நடந்துவரும் அமைப்பு போன்ற தோற்றம் உள்ளது அதை மாற்றவேண்டும்.
* வெளிநாட்டில்
வந்து வேலைதேடுபவருக்கு உதவுவது போன்று , இந்தியாவில் வேலைதேடும் சகோதரர்களுக்கும்
NFWA உதவி செய்ய முன்வர வேண்டும்.
* நாகூர் கடற்க்கரை
குப்பையாக காட்சியளிக்கிறது அதற்கு NFWA நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆகிய
எண்ணற்ற கருத்துக்களை பல சகோதரார்கள் முன்வைத்தார்கள்.
இக்கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சகோதரர் ஃபரிஜால் வாசித்து காட்டினார்.
தீர்மானங்கள்
1.
UAEயில் உள்ள நாகூர் சகோதாரர்கள் அனைவருக்கும் NFWA பற்றியும்
, அதன் செயல்பாடுகள் பற்றி தெரியபடுத்துவது.
2.
NFWA விற்கு நிலையான மாத
வருவாய் வரும்படி UAE நாகூர் சகோதரர்கள் மூலமாக மாத
சந்தாக்களை வசூலிப்பது.
3.
இன்ஷாஅல்லாஹ் ஆண்டுக்கு
ஒருமுறையோ , இருமுறையோ UAEல் நாகூர் சகோதரர்கள்
அனைவரும் ஒன்றுகூடி சந்தித்து கொள்ளும் வழக்கத்தை கொண்டுவருவது.
4.
NFWA அலுவலகத்திற்கு முழுநேர
பொறுப்பாளரை மாத சம்பள அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுப்பது.
5.
விரைவில் NFWA சங்கத்தை
முறைப்படி ரெஜிஸ்டர் செய்து. வங்கி கணக்கு துவங்குவது.
6.
நாகூரில் NFWAவிற்கு தன்னார்வ
உறுப்பினர்களை அதிக அளவில் இணைக்க UAE உள்ள
சகோதரர்களை கொண்டு முயற்சிகள் மேற்கொள்வது.
இறுதியாக
சகோ.அஸ்கர் அலி அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது. NFWA அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு வருகை தந்த சகோதரர்கள் அனைவருக்கும் ஜசாகல்லாஹைரன்.
இந்த சந்திப்பு பலவகையில் பயனுள்ளதாக அமைந்தது. இன்ஷாஅல்லாஹ் NFWA பொறுப்புடனும் , பொதுநலத்துடனும் இன்னும் வீரியாமாக சமூக பணிகளை விரிவுபடுத்தி அல்லாஹ்வின் உதவியால் செயலாற்றும் என்று தெரிவித்துகொள்கிறோம்.
எல்லா
புகழும் இறைவனுக்கே...
Sunday, 14 August 2016
Monday, 25 July 2016
Friday, 3 June 2016
Tuesday, 5 April 2016
Friday, 4 March 2016
Saturday, 27 February 2016
"ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை" சம்மந்தமான முகாம் சிறப்பாக நடைபெற்றது
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..,
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , NFWA மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை" சம்மந்தமான முகாம் நேற்று (20/02/2016) மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
100க்கும் மேற்பட்ட நம் ஊர் சகோதர, சகோதரிகள் இந்த முகாமிற்கு வந்து பயணடைந்தார்கள்.
எங்களுக்கு இந்த மக்கள் பணியை செய்ய வாய்ப்பளித்த வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.
இவண்.
NFWA நாகூர்.
Wednesday, 17 February 2016
Friday, 5 February 2016
Tuesday, 5 January 2016
Subscribe to:
Posts (Atom)