“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.

Wednesday, 5 July 2017

நாகூர் பீர் முஹம்மது - முன்னால் கால்பந்தாட்ட வீரர்.

*நாகூர் பீர் முஹம்மது*
1971 ஆண்டில் அதிராம்பட்டினத்திலிருந்து நாகூருக்கு குடிபெயர்ந்தவர். சிறுவயதிலிருந்தே சிறந்த கால்பந்தாட்ட வீரராக தமிழகத்தில் வலம் வந்தவர்.
1971-76 களிலேயே தமிழக அளவில் கால்பந்தாட்டத்தில் முன்னணி வீரராக சிறந்து விளங்கியவர் பல போட்டிகளில் விளையாடி 83 வெற்றி கோப்பைகளை குவித்துள்ளார் சகோதரர் பீர் முஹம்மது.
நாகூரில் அன்றைய ஆட்டு தொட்டி மைதானம், KRC மைதானத்தில் விளையாடியதையும், சக வீரர்களை பற்றியும் உற்சாகம் பொங்க நினைவுகூர்ந்தார்.
அந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த அனைத்து football clubகளிலும் விளையாடி மக்களின் கவனத்தை ஈர்த்து சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட பீர் முஹம்மதுவிற்கு அந்நாட்களில் அரசுவேலைகள் பல தேடி வந்த வண்ணம் இருந்துள்ளது.
காவல்துறையிலும் இணையுமாறு அழைப்பு வந்துள்ளது. ஆனாலும் எதுவுமே சாத்தியமில்லாமல் போனது பீர் முஹம்மதுக்கு காரணம் அரசு வேலைகளுக்கு குறைந்தது SSLC 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் (அவர் 3ம் வகுப்பே படித்திருந்தார்) என்ன சிறப்பு அம்சங்கள் நம்மிடமிருந்தாலும் அடிப்படை கல்வியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தி பேசினார்.
இருப்பினும் உடல் உழைப்பில் அதிகம் நாட்டம் கொண்ட பீர் முஹம்மது.தனது அண்ணனின் மூலம் தொழிலை கற்றுக்கொண்டு கடந்த 23 ஆண்டுகளாக நாகூர் மெயின் ரோட்டில் siddiq apartment எதிரில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.
இந்த வருமானத்தை வைத்து தான் அவரின் குடும்பம் இயங்குகிறது. இவருக்கு ஒரு மகன்,மகள் இருவரும் திருமணமாகி தனியாக சென்று விட்டார்கள். தற்போது மனைவியோடு வசித்து வருகிறார். அவரின் சைக்கிள் கடைத்தான் அவருக்கு எல்லாமே.
இந்நிலையில் ஏற்கனவே அவர் சைக்கிள் கடையில் பயன்படுத்தி வந்த air compressor மிகவும் பழுதாகிவிட்டதால், வருமானமில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். அவரின் சைக்கிள் கடைக்ககுரிய air compressor வேண்டும் என்று NFWA விற்கு கோரிக்கை வைத்திருந்தார்.
எனவே அவரின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டி NFWA GLOBE குழும சகோதரர்களிடம் வசூல் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் பல சகோதரர் உதவி செய்துள்ளார்கள்.
வரவு/ செலவு விபரம் :
இதுவரை மொத்த வசூலான தொகை - 18100/-
AIr Compressor - ₹14700/-
Accessories - ₹1200
Transport - ₹650
Total Expenses = ₹16550/-
செலவு போக
மீதித்தொகையை சகோ.பீர் முஹம்மதிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ் பொருளாதார உதவி செய்த சகோதரர்கள் அனைவரும் ஜஸாக்கல்லாஹைரன்.
குறிப்பு : 70 வயதுடைய சகோதரர் பீர் முஹம்மதுவிற்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம்.. நம்முடைய சைக்கிள்/ பைக் கிற்கு காற்றடிக்க ஊரில் உள்ள சகோதரர்கள் பீர் முஹம்மது கடைக்கு செல்லுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும்.