அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
NFWA-யின் ஆலோசனை பொதுக் கூட்டம் இன்று (08-03-2017) காலை 11 மணி அளவில் NFWA அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தை சகோ. இப்னு அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார். சகோதரர். இப்ராஹிம் நைனா அவர்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்து NFWA- யின் சேவைகளை பற்றி சுருக்கமாக அனைவருக்கும் எடுத்துரைத்தார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தின் நோக்கத்தையும் NFWA வின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் NFWAவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர். நாசிக் விவரித்தார்.
சகோதரர்.உமர் காகா, சகோதரர்.ரஷீத் மாமா, சகோதரர்.அலி காகா சகோதரர்.ரஷீத் காகா,மற்றும் சகோதரர். அஹ்மத் ரிஸ்வான் ஆகியோர் NFWA-யின் தற்கால , எதிர்கால செயல்பாடுகள் குறித்து பல ஆலோசனைகளை வழங்கி கூட்டத்தை சிறப்பித்தார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் NFWA- யின் துபாய் மண்டல பொறுப்பாளர்கள் சகோதரர். ஹசன் ஆரிஃப்,சகோ யாசர் அரபாத். அபுதாபி மண்டல பொறுப்பாளர் சகோ.அஸ்கர் அலி மற்றும் நாகூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
இறுதியில் இக்கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
📌NFWA அமைப்பின் பணிகளை இன்னும் மேம்படுத்த அமைப்பை முறையாக (ரெஜிஸ்ட்டர்) பதிவு செய்ய வேண்டி இருப்பதால் விரைவாக அதை செய்து முடிப்பது.
📌NFWA -பொதுவான அமைப்பாக செயல்பட்டாலும் பலருக்கு இதன் பணிகள் குறித்து தெரியவில்லை என்பதால் NFWA யின் செயல்பாடுகளை பற்றி துண்டு பிரசுரம் செய்வது.
📌NFWA கடந்த 4 ஆண்டுகளாக பணிகள் செய்துவரும் நிலையில் ஊரில் பணியாற்ற உறுப்பினர்களை அதிக அளவில் இணைக்க முயற்சி மேற்கொள்வது.
📌NFWA முழுக்க முழுக்க நாகூர் மக்களின் நலனுக்காக செயல்பட்டுவரும் வேளையில் நாகூரில் மாத சந்தா வரவு மிக குறைவாக இருப்பதால் சந்தா வை மேம்படுத்த முயற்சி மேற்கொள்வது.
📌NFWA அமைப்பு ஊர்மக்களுக்கான பொதுவான சங்கம் என்பதால் ஊரில் உள்ள அனைத்து பள்ளிகள், அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கு NFWA வின் செயல்பாடுகள் குறித்து முறையாக தெரியப்படுத்தி நல்ல புரிதலாடு மக்கள் பணியாற்ற முயற்சிகள் மேற்கொள்வது.
அழைப்பை ஏற்று கலந்து கொண்ட சகோதரர்கள் அனைவருக்கும் NFWA யின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
ஜசக்கல்லாஹ் ஹைர்.
NFWA ~ நாகூர்