“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.

Tuesday, 21 February 2017

ஐஸ்காரர் சகோதரர்.சீனிவாசனுக்கு நாகூர் சகோதரர்தகள் செய்த உதவி.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஐஸ்காரர் சகோதரர்.சீனிவாசன் இவர் நாகூரில் உள்ள சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர்.

கடந்த  50 ஆண்டுகளாக ஐஸ் விற்பனை செய்து வருபவர். நம் கௌதியா பள்ளியின் அமைப்பு கூட மாறிவிட்டது மனிதர் அதே சுறுசுறுப்புடன்  இன்றும் வியாபாரம் செய்து வருகிறார். கடினமான உழைப்பாளி கண்டிப்பாக நாம் அனைவரும் சிறுவயதில் இவரிடம் ஐஸ் வாங்கி சாப்பிட்டு இருப்போம்.

இப்போது இவருக்கு வயது 70. அப்போது எப்படி இருந்தாரோ அந்தக் காலத்தில் இருந்தே எல்லா மக்களோடும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகி வருபவர்.


அவரின் மகன்கள் சம்பாதித்தாலும், இவருக்கு கொடுப்பதில்லை, இவரும் கேட்பதில்லை,எதிர்பார்ப்பதில்லை.இந்நிலையில் தனக்காகவும், தன் மனைவிக்காகவும் கால்கடுக்க நின்று உழைக்கும் சகோதரர்.சீனிவாசன் நம்மிடம் ஐஸ் விளைவிக்க freezer  வேண்டும் என்று உரிமையோடு கேட்டிருந்தார் எனவே,
அவருக்கு NFWA உதவி செய்யலாம் என்று முடிவெடுத்து NFWA GLOBE என்னும் வாட்ஸ் அப் குழுமம் மூலமாக இதற்காக பொருளாதாரம் தேவை என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன்அடிப்படையில் பல சகோதரர்கள் ஒன்றிணைந்து உதவ முன்வந்து தங்களின் பொருளாதரத்தை வழங்கியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Freezer க்கு செலவான மொத்த தொகை ₹15000/-

₹14800 - freezer ன் விலை
₹100- வண்டி கூலி (200 கேட்டார்கள் ,பிறகு 100 பெற்றுகொண்டார்கள் )
மீதம் இருந்த 100 ரூபாயையும் சகோ.சீனிவாசனிடமே கொடுக்கப்பட்டது.


சகோதரர்.சீனிவாசன் தனக்கு உதவி செய்த சகோதரர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

உதவி நல் உள்ளங்கள் அனைவருக்கும் NFWA சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

ஜஸாக்கல்லாஹ்.



Friday, 3 February 2017

டிசம்பர் (2016) மாத வரவு செலவு விபரம்.

2016 - டிசம்பர் மாத வரவு /செலவு விபரம்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

சகோதரர்களே..,

டிசம்பர் மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...

அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.



ஜசாகல்லாஹைரன்







2017 - ஜனவரி வரவு செலவு விபரம்

2017 - ஜனவரி வரவு செலவு விபரம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,
ஜனவரி மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.