“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.

Sunday, 1 January 2017

மழையில் இடிந்த வீடு சரி செய்து கொடுக்கபட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
நாகூர் காட்டுப்பள்ளி குளம் தெருவை சார்ந்த கதவு எண் 5ல் வசிக்கும் ஒரு சகோதரியின் வீட்டின் சுவர் சில நாட்களுக்கு முன்னாள் ஏற்பட்ட மழையில் இடிந்து விழுந்து வீட்டில் உள்ள அனைத்தும் வெளியில் தெரியும் அளவுக்கு சூழ்நிலை ஏற்பட்டதால் உதவி செய்யுமாறு சில சகோதரர்கள் பதிவிட்டு இருந்தார்கள்.
அதன்படி NFWA மூலமாக அந்த வீட்டின் சுவரையும் மற்றும் வீட்டின் கூரையையும் முழுவதுமாக சரி செய்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இதற்காக வசூலிக்கப்பட்ட தொகையின் வரவு /செலவு விபரம்:

செலவுகள்: 
வீட்டிற்கு சுவர் எடுத்த செலவு : ₹16000
வீட்டிற்கு கூரை போட்ட மொத்த செலவு: ₹16480
📌மொத்த செலவு : ₹ 32480/- 

வரவுகள்:
NMG குழும சகோதரர்கள் மூலம் - (5000+5000+500) ₹ 10500
நாகூர் சகோதரர்கள் மூலமாக - (2000+5000+500+900) ₹8400
NFWA மூலமாக - ₹13580
📌மொத்தம் வரவு : ₹32480/-




ஜம்மியத்து நகர் மக்கள் பயன்பாட்டுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் மேஜை.

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

தெத்தி சமரசம் நகர் அருகில் உள்ள ஜாமியத்து நகரில் வசிக்கும் மக்களுக்கு ஜனாஜா குளிப்பாட்ட மேஜை தேவைபடுகிறது என NFWA விடம் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
அதன்படி சகோதரர்களிடம் உதவி கேட்டிருந்தோம்.

அதற்கு செலவான மொத்த தொகை ₹13000+ சென்னையிலிருந்து லாரியில் வந்து இறக்கிய செலவு ₹950.

1.₹5000 + ₹ 2400 = ₹ 7400
2.₹3600
3.₹2000
4.₹950

என ₹13950 நான்கு சகோதரர்கள் ஒன்றிணைந்து பொறுப்பேற்று கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

ஜம்மியத் நகர் மக்களின் பொது பயன்பாட்டுக்காக இது பயன்படுத்தப்படும்.இதை பராமரிப்பது ஜம்மியத் நகர் பள்ளிவாசல் நிர்வாகம்.

உதவிய சகோதரர்களுக்கு அல்லாஹ் மேலும் செல்வத்தை அபிவிருத்தி செய்ய துஆ செய்யுங்கள் சகோதரர்களே.

-NFWA