“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.

Friday, 8 September 2017

ஆகஸ்ட் 2017 மாத வரவு /செலவு விபரம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,

ஆகஸ்ட்  மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். 
அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.


ஜூலை மாத வரவு /செலவு விபரம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,

ஜூலை மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். 
அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.


Wednesday, 5 July 2017

நாகூர் பீர் முஹம்மது - முன்னால் கால்பந்தாட்ட வீரர்.

*நாகூர் பீர் முஹம்மது*
1971 ஆண்டில் அதிராம்பட்டினத்திலிருந்து நாகூருக்கு குடிபெயர்ந்தவர். சிறுவயதிலிருந்தே சிறந்த கால்பந்தாட்ட வீரராக தமிழகத்தில் வலம் வந்தவர்.
1971-76 களிலேயே தமிழக அளவில் கால்பந்தாட்டத்தில் முன்னணி வீரராக சிறந்து விளங்கியவர் பல போட்டிகளில் விளையாடி 83 வெற்றி கோப்பைகளை குவித்துள்ளார் சகோதரர் பீர் முஹம்மது.
நாகூரில் அன்றைய ஆட்டு தொட்டி மைதானம், KRC மைதானத்தில் விளையாடியதையும், சக வீரர்களை பற்றியும் உற்சாகம் பொங்க நினைவுகூர்ந்தார்.
அந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த அனைத்து football clubகளிலும் விளையாடி மக்களின் கவனத்தை ஈர்த்து சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட பீர் முஹம்மதுவிற்கு அந்நாட்களில் அரசுவேலைகள் பல தேடி வந்த வண்ணம் இருந்துள்ளது.
காவல்துறையிலும் இணையுமாறு அழைப்பு வந்துள்ளது. ஆனாலும் எதுவுமே சாத்தியமில்லாமல் போனது பீர் முஹம்மதுக்கு காரணம் அரசு வேலைகளுக்கு குறைந்தது SSLC 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் (அவர் 3ம் வகுப்பே படித்திருந்தார்) என்ன சிறப்பு அம்சங்கள் நம்மிடமிருந்தாலும் அடிப்படை கல்வியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தி பேசினார்.
இருப்பினும் உடல் உழைப்பில் அதிகம் நாட்டம் கொண்ட பீர் முஹம்மது.தனது அண்ணனின் மூலம் தொழிலை கற்றுக்கொண்டு கடந்த 23 ஆண்டுகளாக நாகூர் மெயின் ரோட்டில் siddiq apartment எதிரில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.
இந்த வருமானத்தை வைத்து தான் அவரின் குடும்பம் இயங்குகிறது. இவருக்கு ஒரு மகன்,மகள் இருவரும் திருமணமாகி தனியாக சென்று விட்டார்கள். தற்போது மனைவியோடு வசித்து வருகிறார். அவரின் சைக்கிள் கடைத்தான் அவருக்கு எல்லாமே.
இந்நிலையில் ஏற்கனவே அவர் சைக்கிள் கடையில் பயன்படுத்தி வந்த air compressor மிகவும் பழுதாகிவிட்டதால், வருமானமில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். அவரின் சைக்கிள் கடைக்ககுரிய air compressor வேண்டும் என்று NFWA விற்கு கோரிக்கை வைத்திருந்தார்.
எனவே அவரின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டி NFWA GLOBE குழும சகோதரர்களிடம் வசூல் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் பல சகோதரர் உதவி செய்துள்ளார்கள்.
வரவு/ செலவு விபரம் :
இதுவரை மொத்த வசூலான தொகை - 18100/-
AIr Compressor - ₹14700/-
Accessories - ₹1200
Transport - ₹650
Total Expenses = ₹16550/-
செலவு போக
மீதித்தொகையை சகோ.பீர் முஹம்மதிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ் பொருளாதார உதவி செய்த சகோதரர்கள் அனைவரும் ஜஸாக்கல்லாஹைரன்.
குறிப்பு : 70 வயதுடைய சகோதரர் பீர் முஹம்மதுவிற்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம்.. நம்முடைய சைக்கிள்/ பைக் கிற்கு காற்றடிக்க ஊரில் உள்ள சகோதரர்கள் பீர் முஹம்மது கடைக்கு செல்லுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும்.


Thursday, 8 June 2017

2017 - மே மாத வரவு செலவு விபரம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....

சகோதரர்களே..,

மே வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.


Wednesday, 10 May 2017

2017 - ஏப்ரல் மாத வரவு செலவு விபரம்



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,
ஏப்ரல்  மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.


Friday, 7 April 2017

2017 - மார்ச் மாத வரவு செலவு விபரம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,
மார்ச்  மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.


Thursday, 9 March 2017

NFWA-யின் ஆலோசனை பொதுக் கூட்டம் 08-03-2017

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்..

NFWA-யின் ஆலோசனை பொதுக் கூட்டம் இன்று (08-03-2017) காலை 11 மணி அளவில் NFWA அலுவலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தை சகோ. இப்னு அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார். சகோதரர். இப்ராஹிம் நைனா அவர்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்து NFWA- யின் சேவைகளை பற்றி சுருக்கமாக அனைவருக்கும் எடுத்துரைத்தார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தின் நோக்கத்தையும் NFWA வின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் NFWAவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர். நாசிக் விவரித்தார்.

சகோதரர்.உமர் காகா, சகோதரர்.ரஷீத் மாமா,  சகோதரர்.அலி காகா சகோதரர்.ரஷீத் காகா,மற்றும் சகோதரர். அஹ்மத் ரிஸ்வான் ஆகியோர் NFWA-யின் தற்கால , எதிர்கால செயல்பாடுகள் குறித்து பல ஆலோசனைகளை வழங்கி கூட்டத்தை சிறப்பித்தார்கள்.

மேலும் இக்கூட்டத்தில் NFWA- யின் துபாய் மண்டல பொறுப்பாளர்கள்  சகோதரர். ஹசன் ஆரிஃப்,சகோ யாசர் அரபாத். அபுதாபி மண்டல பொறுப்பாளர் சகோ.அஸ்கர் அலி மற்றும் நாகூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள். 

இறுதியில் இக்கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

📌NFWA அமைப்பின் பணிகளை இன்னும் மேம்படுத்த அமைப்பை முறையாக (ரெஜிஸ்ட்டர்) பதிவு செய்ய வேண்டி இருப்பதால் விரைவாக அதை செய்து முடிப்பது.

📌NFWA -பொதுவான அமைப்பாக செயல்பட்டாலும் பலருக்கு இதன் பணிகள் குறித்து தெரியவில்லை என்பதால் NFWA யின் செயல்பாடுகளை  பற்றி துண்டு பிரசுரம் செய்வது.

📌NFWA கடந்த 4 ஆண்டுகளாக பணிகள் செய்துவரும் நிலையில் ஊரில் பணியாற்ற உறுப்பினர்களை அதிக அளவில் இணைக்க முயற்சி மேற்கொள்வது.

📌NFWA முழுக்க முழுக்க நாகூர் மக்களின் நலனுக்காக செயல்பட்டுவரும் வேளையில் நாகூரில் மாத சந்தா வரவு மிக குறைவாக இருப்பதால் சந்தா வை மேம்படுத்த முயற்சி மேற்கொள்வது.

📌NFWA அமைப்பு ஊர்மக்களுக்கான பொதுவான சங்கம் என்பதால் ஊரில் உள்ள அனைத்து பள்ளிகள், அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கு NFWA வின் செயல்பாடுகள் குறித்து முறையாக தெரியப்படுத்தி நல்ல புரிதலாடு மக்கள் பணியாற்ற முயற்சிகள் மேற்கொள்வது.

அழைப்பை ஏற்று கலந்து கொண்ட சகோதரர்கள்  அனைவருக்கும் NFWA யின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். 

ஜசக்கல்லாஹ் ஹைர்.

NFWA ~ நாகூர்










Monday, 6 March 2017

2017 - பிப்ரவரி மாத வரவு செலவு விபரம்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே.


 2017 - பிப்ரவரி மாத வரவு செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...

அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.



Tuesday, 21 February 2017

ஐஸ்காரர் சகோதரர்.சீனிவாசனுக்கு நாகூர் சகோதரர்தகள் செய்த உதவி.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஐஸ்காரர் சகோதரர்.சீனிவாசன் இவர் நாகூரில் உள்ள சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர்.

கடந்த  50 ஆண்டுகளாக ஐஸ் விற்பனை செய்து வருபவர். நம் கௌதியா பள்ளியின் அமைப்பு கூட மாறிவிட்டது மனிதர் அதே சுறுசுறுப்புடன்  இன்றும் வியாபாரம் செய்து வருகிறார். கடினமான உழைப்பாளி கண்டிப்பாக நாம் அனைவரும் சிறுவயதில் இவரிடம் ஐஸ் வாங்கி சாப்பிட்டு இருப்போம்.

இப்போது இவருக்கு வயது 70. அப்போது எப்படி இருந்தாரோ அந்தக் காலத்தில் இருந்தே எல்லா மக்களோடும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகி வருபவர்.


அவரின் மகன்கள் சம்பாதித்தாலும், இவருக்கு கொடுப்பதில்லை, இவரும் கேட்பதில்லை,எதிர்பார்ப்பதில்லை.இந்நிலையில் தனக்காகவும், தன் மனைவிக்காகவும் கால்கடுக்க நின்று உழைக்கும் சகோதரர்.சீனிவாசன் நம்மிடம் ஐஸ் விளைவிக்க freezer  வேண்டும் என்று உரிமையோடு கேட்டிருந்தார் எனவே,
அவருக்கு NFWA உதவி செய்யலாம் என்று முடிவெடுத்து NFWA GLOBE என்னும் வாட்ஸ் அப் குழுமம் மூலமாக இதற்காக பொருளாதாரம் தேவை என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன்அடிப்படையில் பல சகோதரர்கள் ஒன்றிணைந்து உதவ முன்வந்து தங்களின் பொருளாதரத்தை வழங்கியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Freezer க்கு செலவான மொத்த தொகை ₹15000/-

₹14800 - freezer ன் விலை
₹100- வண்டி கூலி (200 கேட்டார்கள் ,பிறகு 100 பெற்றுகொண்டார்கள் )
மீதம் இருந்த 100 ரூபாயையும் சகோ.சீனிவாசனிடமே கொடுக்கப்பட்டது.


சகோதரர்.சீனிவாசன் தனக்கு உதவி செய்த சகோதரர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

உதவி நல் உள்ளங்கள் அனைவருக்கும் NFWA சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

ஜஸாக்கல்லாஹ்.



Friday, 3 February 2017

டிசம்பர் (2016) மாத வரவு செலவு விபரம்.

2016 - டிசம்பர் மாத வரவு /செலவு விபரம்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

சகோதரர்களே..,

டிசம்பர் மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...

அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.



ஜசாகல்லாஹைரன்







2017 - ஜனவரி வரவு செலவு விபரம்

2017 - ஜனவரி வரவு செலவு விபரம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,
ஜனவரி மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.




Sunday, 1 January 2017

மழையில் இடிந்த வீடு சரி செய்து கொடுக்கபட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
நாகூர் காட்டுப்பள்ளி குளம் தெருவை சார்ந்த கதவு எண் 5ல் வசிக்கும் ஒரு சகோதரியின் வீட்டின் சுவர் சில நாட்களுக்கு முன்னாள் ஏற்பட்ட மழையில் இடிந்து விழுந்து வீட்டில் உள்ள அனைத்தும் வெளியில் தெரியும் அளவுக்கு சூழ்நிலை ஏற்பட்டதால் உதவி செய்யுமாறு சில சகோதரர்கள் பதிவிட்டு இருந்தார்கள்.
அதன்படி NFWA மூலமாக அந்த வீட்டின் சுவரையும் மற்றும் வீட்டின் கூரையையும் முழுவதுமாக சரி செய்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இதற்காக வசூலிக்கப்பட்ட தொகையின் வரவு /செலவு விபரம்:

செலவுகள்: 
வீட்டிற்கு சுவர் எடுத்த செலவு : ₹16000
வீட்டிற்கு கூரை போட்ட மொத்த செலவு: ₹16480
📌மொத்த செலவு : ₹ 32480/- 

வரவுகள்:
NMG குழும சகோதரர்கள் மூலம் - (5000+5000+500) ₹ 10500
நாகூர் சகோதரர்கள் மூலமாக - (2000+5000+500+900) ₹8400
NFWA மூலமாக - ₹13580
📌மொத்தம் வரவு : ₹32480/-




ஜம்மியத்து நகர் மக்கள் பயன்பாட்டுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் மேஜை.

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

தெத்தி சமரசம் நகர் அருகில் உள்ள ஜாமியத்து நகரில் வசிக்கும் மக்களுக்கு ஜனாஜா குளிப்பாட்ட மேஜை தேவைபடுகிறது என NFWA விடம் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
அதன்படி சகோதரர்களிடம் உதவி கேட்டிருந்தோம்.

அதற்கு செலவான மொத்த தொகை ₹13000+ சென்னையிலிருந்து லாரியில் வந்து இறக்கிய செலவு ₹950.

1.₹5000 + ₹ 2400 = ₹ 7400
2.₹3600
3.₹2000
4.₹950

என ₹13950 நான்கு சகோதரர்கள் ஒன்றிணைந்து பொறுப்பேற்று கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

ஜம்மியத் நகர் மக்களின் பொது பயன்பாட்டுக்காக இது பயன்படுத்தப்படும்.இதை பராமரிப்பது ஜம்மியத் நகர் பள்ளிவாசல் நிர்வாகம்.

உதவிய சகோதரர்களுக்கு அல்லாஹ் மேலும் செல்வத்தை அபிவிருத்தி செய்ய துஆ செய்யுங்கள் சகோதரர்களே.

-NFWA