அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)...
டிசம்பர் முதல்வாரதிலிருந்து நாகூரில் தொடர்ந்து மழைபெய்து வந்ததால் , தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.. அதை கருத்தில் கொண்டு ..
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் நாகூர் மணல்மேடு பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ரூ. 20000/- மதிப்புள்ள அரிசி, மைதா, சமையல் எண்ணெய், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் சுமார் 60 குடும்பங்களுக்கு 08.12.15 அன்று NFWA சார்பாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..
மேலும் MGR நகர் மற்றும் தேத்தி போன்ற இதர பகுதி மக்களுக்கு உதவிகள்செய்யலாம் என்ற ஏற்பாட்டில் இருந்தோம் ஆனால் நம் சமூக அமைப்புகள், ஜமாஅத் களும் தற்போது களத்தில் இறங்கி உதவிகள் செய்துவருகிறார்கள் எனவே.. உதவிகள் கிடைக்காத குடும்பங்கள் மற்றும் மேலதிகமாக உதவிகள் தேவைபடுவோர் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால் NFWA சகோதரர்களுக்கு தெரியபடுத்துங்கள்... இன்ஷாஅல்லாஹ்... தேவையான உதவிகள் அவர்களுக்கு செய்துகொடுக்கபடும்.