அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..
அறிவிப்பு செய்தது போல் நேற்று ( 19/09/15)
சனிக்கிழமை NFWA வின் ஆலோசனை குழு கூட்டம் NFWA அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது சகோதரர்கள் பலர் கலந்துகொண்டு
சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
ஆலோசனை குழு கூட்டத்தில்
கலந்தாலோசித்து எடுக்கப்படட தீர்மானங்கள்.
<> NFWAவிற்கு நாகூரில் சந்தா வரவு
திருப்திகரமாக இல்லை என்பதை கருத்தில் கொண்டு சந்தா வசூலிக்க தனியாக பொறுப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்
என்று முடிவெடுக்கப்பட்டு, பொறுப்பாளராக சகோதரர் அப்துர் ரஹீம்(சேத்தாப்பா) தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அப்துர் ரஹீம் - 90952
28341.
<> NFWA சார்பாக கல்வி, மருத்துவம் ,தொழில் என்று மூன்றின் பிரிவின்
கீழ் பொருளாதார உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் தொழில் உதவியை பொறுத்தவரை தொழில்
உதவிக்கு என்று விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுடையவர்களா என்று ஆய்வு
செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வந்தது அல்ஹம்துலில்லாஹ். இந்நிலையில் தொழில்
உதவி செய்வதில் சில நடைமுறை சிக்கல் இருந்து வருவதாலும் , சில நேரங்களில் தொழில் உதவி
வழங்குவதால் கல்வி உதவி கேட்டு விண்ணப்பிக்கும் சகோதரர்களுக்கு உதவி செய்யமுடியாத
சூழல் ஏற்படுகிறது என்பதால் இனி தொழில் உதவிகளுக்காக விண்ணப்பங்கள்
பெறப்படமாட்டாது என்றும், ஒருவேளை மிகமுக்கியமாக தெரிந்தால் NFWA கவனத்திற்கு
வந்தால் ஆய்வு செய்து NFWA தானாக முன்வந்து அப்படிப்பட்ட நபர்களுக்கு மட்டும் உதவிகளை செய்யும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
<> இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஹஜ்ஜு பெருநாளை
முன்னிட்டு அறுக்கப்படும் குர்பானி ஆடு மற்றும் மாட்டுத்தோல்களை NFWAவிற்கு வழங்கும்படி ஊர் மக்களுக்கு அறிவிப்பு செய்வது என்று
முடிவெடுக்கப்பட்டு, தோல்களை வசூல் செய்வதற்க்காக
பொறுப்பாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தொடர்புக்கு : 90952 28341 , 98402 77270
<>அதை போல பெருநாளை முன்னிட்டு NFWA சார்பாக நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களின் உள்ள ஏழை எளிய
மக்களுக்கு குர்பானி இறைச்சியை பகிர்ந்தளிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி விருப்பபடும் சகோதரர்கள் தங்களின் தேவைக்கு போக இருக்கும் குர்பானி கறிகளை
NFWAவிற்கு வழங்கினால் அதை இன்ஷாஅல்லாஹ் உரிய முறையில் விநியோகம் செய்யப்படும்
என்று முடிவெடுக்கப்பட்டது.
ஜசாகல்லாஹ்.