அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,
மே மாத வரவு /செலவு
விபரம் வெளியிடப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.
நம் ஊரில் , நம் கண்முன்னே நம் சகோதர, சகோதரிகள் பலர் பலவகையான பொருளாதார
நெருக்கடியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
. பொருளாதார நெருக்கடியில் தன் பிள்ளைகளை படிக்கவைக்க முடியாமல் ,
பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் நிலையை பார்க்கிறோம் .. , மேலும் நோய் நொடிகளுக்கு
சிகிச்சை அளிக்கமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள், போதிய வருமானம் இல்லாமலும் , தொழில்
நஷ்டம் ஏற்பட்டும் வறுமையில் குடும்பங்கள்
வாடுவதை பார்க்க முடிகிறது. சிலர் உதவி வேண்டி வெளிப்படையாக கேட்கிறார்கள் ,
சிலர் வெட்கப்பட்டுகொண்டு தயங்குவதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது...
எனவே இது போன்ற மக்களின்
பொருளாதார கஷ்டங்களை கவனத்தில்கொண்டு இந்த
அமைப்பின் மூலமாக கல்வி உதவிகள் , மருத்துவ உதவிகள் , தொழில் உதவிகள் என பல உதவிகள் எங்களால் முடிந்தஅளவிற்கு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் செய்துவருகிறோம். அல்லாஹ்விற்கே அனைத்து
புகழும்..
NFWA தொடங்கப்பட்டதிலிருந்தே
வெளிநாட்டில் பணிபுரியும் பல நாகூர் சகோதரர்கள் தங்கள் பொருளாதாரத்தை தொடர்ந்து
வழங்கி ஆதரவு தந்துகொண்டிருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹ் உங்கள் செல்வதை
அபிவிருத்தி செய்வானாக..
நாகூர் சகோதரர்களான உங்களுக்கு
NFWAவின் அன்பான வேண்டுகோள் என்ன வென்றால்...,
தற்போது பொருளாதார கையிருப்பு மிக குறைவாக
இருப்பதாலும் , உதவி கேட்டு விண்ணப்பங்கள் நிறைய வந்து கொண்டிருப்பதாலும் ,
பணிகளுக்கான பொருளாதார தேவை அதிகரித்துள்ளது . இந்த அமைப்பிற்கு என்று நிரந்தர
வருமானம் ஏதும் இல்லை. வெளிநாட்டு
சகோதாரர்களான உங்களின் பொருளாதார பங்களிப்பை பெரிதும் நம்பி தான் NFWA
செயல்பட்டுகொண்டிருக்கிறது. ஆகவே
NFWAவிற்க்காக மாத சந்தா வழங்கும்
வெளிநாட்டு சகோதாரர்கள் விட்டுபோகாமல் தொடர்ந்து வழங்கும்படி கேட்டுகொள்வதோடு..
மற்ற நாகூர் சகோதரர்களும் NFWAவிற்கு சந்தா
வழங்கி நற்பணிகள் தொடர்ந்து நடைபெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று
கேட்டுகொள்கிறோம். இன்ஷாஅல்லாஹ் வர கூடிய காலங்களில் இன்னும் அதிகமான பணிகளை
தொடர்ந்து செய்துவர வல்ல ரஹ்மான் கிருபை
செய்வானாக.. அனைவரும் துஆ செய்யுங்கள்.
ஜசாக்கல்லாஹைரன்..
‘நீங்கள் தர்மம் செய்ய நாடினால், சைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டியும், கஞ்சத்தனத்தைச் செய்யும் படிக்கும் உங்களைத் தூண்டுவான். ஆனால் அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன்னுடைய மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்கு தருவதாக) வாக்களிக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:268)