“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.

Thursday, 17 December 2015

நாகூரில் NFWA சார்பாக நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது .



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)...
டிசம்பர் முதல்வாரதிலிருந்து நாகூரில் தொடர்ந்து மழைபெய்து வந்ததால் , தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.. அதை கருத்தில் கொண்டு ..
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் நாகூர் மணல்மேடு பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ரூ. 20000/- மதிப்புள்ள அரிசி, மைதா, சமையல் எண்ணெய், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் சுமார் 60 குடும்பங்களுக்கு 08.12.15 அன்று NFWA சார்பாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..
மேலும் MGR நகர் மற்றும் தேத்தி போன்ற இதர பகுதி மக்களுக்கு உதவிகள்செய்யலாம் என்ற ஏற்பாட்டில் இருந்தோம் ஆனால் நம் சமூக அமைப்புகள், ஜமாஅத் களும் தற்போது களத்தில் இறங்கி உதவிகள் செய்துவருகிறார்கள் எனவே.. உதவிகள் கிடைக்காத குடும்பங்கள் மற்றும் மேலதிகமாக உதவிகள் தேவைபடுவோர் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால் NFWA சகோதரர்களுக்கு தெரியபடுத்துங்கள்... இன்ஷாஅல்லாஹ்... தேவையான உதவிகள் அவர்களுக்கு செய்துகொடுக்கபடும்.
ஜசாகல்லாஹைரன்..


Saturday, 5 December 2015

2015 - நவம்பர் மாத வரவு /செலவு விபரம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,
நவம்பர் மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.

ஜசாகல்லாஹைரன்.


Tuesday, 3 November 2015

2015 - அக்டோபர் மாத வரவு/செலவு

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....


சகோதரர்களே..,
அக்டோபர்  மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.


ஜசாகல்லாஹைரன்.



Monday, 12 October 2015

நாகூர் சகோதரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..

நமது நாகூர் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பாக ஏற்கனவே கீழ்க்கண்ட அறிவிப்பு செய்திருந்தோம்...


இதன்படி ஊர் மக்கள் தேவைக்கு தொடர்பு கொண்டு பயன்பெறுகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

இந்நிலையில், ஜனாஸாவிற்கு செய்ய வேண்டிய பணிவிடைகளுக்கு தேவையான பொருளோடு சேர்த்து  கபுரில் போடும் பாய்யும் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனெனில் மற்றபொருள்கள் , விறகு  உட்பட அனைத்தும் நாகூரில்  கிடைத்துவிடுகிறது ஆனால் பாய் தட்டுப்பாடாக இருக்கிறது , அந்த நேரத்தில் அலையவேண்டியுள்ளது வெளியூரில் தான் கிடைக்கிறது எனவே அதற்க்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சில சகோதரர்கள் ஆலோசனை சொன்னார்கள்..

நல்ல ஆலோசனை என்பதால் அதை ஏற்று  ஜனாஸா  அடக்கம் செய்ய தேவைப்படும் பாய் ( 25 எண்ணிக்கை) புதிதாக  வாங்கப்பட்டு அலுவலகத்தில் வைக்கபட்டுள்ளது.



எனவே நம் ஊர் சகோதரர்கள் , எந்த நேரமாக இருந்தாலும் தேவைப்படும் நேரத்தில் எங்களை தொடர்பு கொண்டு பெற்றுகொள்ளலாம் என்பதை தெரியபடுத்திகொள்கிறோம் .
தொடர்புக்கு :  98433 36598 , 99420 15016 , 98402 77270



Tuesday, 6 October 2015

2015 - செப்டம்பர் மாத வரவு/செலவு

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,
செப்டம்பர்   மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.





Sunday, 20 September 2015

ஆலோசனை குழு கூட்டம் 19-09-2015

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..

அறிவிப்பு செய்தது போல் நேற்று ( 19/09/15) சனிக்கிழமை  NFWA வின் ஆலோசனை குழு கூட்டம் NFWA அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது சகோதரர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து எடுக்கப்படட தீர்மானங்கள்.

<> NFWAவிற்கு நாகூரில் சந்தா வரவு திருப்திகரமாக இல்லை என்பதை கருத்தில் கொண்டு சந்தா வசூலிக்க  தனியாக பொறுப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, பொறுப்பாளராக சகோதரர் அப்துர் ரஹீம்(சேத்தாப்பா)  தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அப்துர் ரஹீம் -  90952 28341.

<> NFWA சார்பாக கல்வி, மருத்துவம் ,தொழில் என்று மூன்றின் பிரிவின் கீழ் பொருளாதார உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் தொழில் உதவியை பொறுத்தவரை தொழில் உதவிக்கு என்று விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுடையவர்களா என்று ஆய்வு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வந்தது அல்ஹம்துலில்லாஹ். இந்நிலையில் தொழில் உதவி செய்வதில் சில நடைமுறை சிக்கல் இருந்து வருவதாலும் ,     சில நேரங்களில் தொழில் உதவி வழங்குவதால் கல்வி உதவி கேட்டு விண்ணப்பிக்கும் சகோதரர்களுக்கு உதவி செய்யமுடியாத சூழல் ஏற்படுகிறது என்பதால் இனி தொழில் உதவிகளுக்காக விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது என்றும், ஒருவேளை மிகமுக்கியமாக தெரிந்தால் NFWA கவனத்திற்கு வந்தால் ஆய்வு செய்து NFWA தானாக முன்வந்து அப்படிப்பட்ட நபர்களுக்கு மட்டும்  உதவிகளை செய்யும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

<> இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு அறுக்கப்படும் குர்பானி ஆடு மற்றும் மாட்டுத்தோல்களை NFWAவிற்கு வழங்கும்படி ஊர் மக்களுக்கு அறிவிப்பு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டு, தோல்களை வசூல் செய்வதற்க்காக பொறுப்பாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தொடர்புக்கு : 90952 28341 , 98402 77270


<>அதை போல பெருநாளை முன்னிட்டு NFWA சார்பாக நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களின் உள்ள ஏழை எளிய மக்களுக்கு குர்பானி இறைச்சியை பகிர்ந்தளிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி விருப்பபடும் சகோதரர்கள் தங்களின் தேவைக்கு போக இருக்கும் குர்பானி கறிகளை NFWAவிற்கு வழங்கினால் அதை இன்ஷாஅல்லாஹ் உரிய முறையில் விநியோகம் செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஜசாகல்லாஹ்.

Thursday, 3 September 2015

2015 - ஆகஸ்ட் மாத வரவு/செலவு


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,
ஆகஸ்ட்  மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.



Monday, 3 August 2015

2015 - ஜூலை மாத வரவு/செலவு

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....

சகோதரர்களே.., 

ஜூலை  மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது..
அல்ஹம்துலில்லாஹ்.  

அனைவரும் பார்வையிடுங்கள். 

ஜசாகல்லாஹைரன்.


Saturday, 4 July 2015

2015 - ஜூன் மாத வரவு /செலவு

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

சகோதரர்களே ..,

NFWA பணிகளுக்கு பொருளாதார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது ... குறிப்பாக கல்விஉதவித்தொகை கேட்டு பல விண்ணப்பங்கள் வந்துள்ளது , கையிருப்பு குறைவாக இருப்பதால் நம்மால் நிறைவாக உதவிகளை செய்யமுடியவில்லை ..

ஆகவே சகோதரர்கள் தங்களின் சந்தாகளை தொடர்ந்து வழங்குவதுடன் கூடுதலாக வழங்கி பணிகள் நடைபெற உதவிடுமாறு கேட்டுகொள்கிறோம்.

ஜசாக்கல்லாஹைரன்.

Thursday, 4 June 2015

2015 - மே மாத வரவு /செலவு


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....

சகோதரர்களே.., 

மே மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.  அனைவரும் பார்வையிடுங்கள். 

நம் ஊரில் , நம் கண்முன்னே  நம் சகோதர, சகோதரிகள் பலர் பலவகையான பொருளாதார நெருக்கடியில்    வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .  பொருளாதார நெருக்கடியில்  தன் பிள்ளைகளை படிக்கவைக்க முடியாமல் , பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் நிலையை பார்க்கிறோம் .. , மேலும் நோய் நொடிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள், போதிய வருமானம் இல்லாமலும் , தொழில் நஷ்டம் ஏற்பட்டும்  வறுமையில் குடும்பங்கள் வாடுவதை பார்க்க முடிகிறது.  சிலர்  உதவி வேண்டி வெளிப்படையாக கேட்கிறார்கள் , சிலர் வெட்கப்பட்டுகொண்டு தயங்குவதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது...

எனவே இது போன்ற மக்களின் பொருளாதார  கஷ்டங்களை கவனத்தில்கொண்டு இந்த அமைப்பின் மூலமாக  கல்வி உதவிகள்  , மருத்துவ உதவிகள்  , தொழில் உதவிகள் என பல உதவிகள் எங்களால் முடிந்தஅளவிற்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் செய்துவருகிறோம். அல்லாஹ்விற்கே அனைத்து புகழும்..

NFWA தொடங்கப்பட்டதிலிருந்தே வெளிநாட்டில் பணிபுரியும் பல நாகூர் சகோதரர்கள் தங்கள் பொருளாதாரத்தை தொடர்ந்து வழங்கி ஆதரவு தந்துகொண்டிருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹ் உங்கள் செல்வதை அபிவிருத்தி செய்வானாக..

நாகூர் சகோதரர்களான உங்களுக்கு NFWAவின் அன்பான வேண்டுகோள் என்ன வென்றால்...,

தற்போது பொருளாதார கையிருப்பு மிக குறைவாக இருப்பதாலும் , உதவி கேட்டு விண்ணப்பங்கள் நிறைய வந்து கொண்டிருப்பதாலும் , பணிகளுக்கான பொருளாதார தேவை அதிகரித்துள்ளது . இந்த அமைப்பிற்கு என்று நிரந்தர வருமானம் ஏதும்  இல்லை. வெளிநாட்டு சகோதாரர்களான உங்களின் பொருளாதார பங்களிப்பை பெரிதும் நம்பி தான் NFWA செயல்பட்டுகொண்டிருக்கிறது. ஆகவே  NFWAவிற்க்காக  மாத சந்தா வழங்கும் வெளிநாட்டு சகோதாரர்கள் விட்டுபோகாமல் தொடர்ந்து வழங்கும்படி கேட்டுகொள்வதோடு.. மற்ற நாகூர் சகோதரர்களும்  NFWAவிற்கு சந்தா வழங்கி நற்பணிகள்  தொடர்ந்து நடைபெற  உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். இன்ஷாஅல்லாஹ் வர கூடிய காலங்களில் இன்னும் அதிகமான பணிகளை தொடர்ந்து செய்துவர  வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக..  அனைவரும் துஆ செய்யுங்கள்.

ஜசாக்கல்லாஹைரன்..                                        
                                              
நீங்கள் தர்மம் செய்ய நாடினால், சைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டியும், கஞ்சத்தனத்தைச் செய்யும் படிக்கும் உங்களைத் தூண்டுவான். ஆனால் அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன்னுடைய மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்கு தருவதாக) வாக்களிக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:268)


Monday, 18 May 2015

NFWA புதிய அலுவலகம் திறப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..

15/05/15  அன்று NFWAவின் புதிய அலுவலகம் திறப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது.
அது சமயம் பரீது மாமா மற்றும் பாரூக் மாமா இருவரும் NFWAவின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்துவைத்து பல நல்ல கருத்துகளையும் , ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

மேலும் முஹல்லாவில் உள்ள சகோதரர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வை NFWA சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.




























Sunday, 17 May 2015

துபாய் - அறிமுககூட்டம்


NFWA வின் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் 16/01/15 வெள்ளிக்கிழமை அன்று துபாய் மம்ஜார் கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது.
A.M.அப்துல் ஹமீது அவர்கள் தலைமையில்,
சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள் & சகோ.ஹாஜா ரைஸ் தீன் அவர்கள் முன்னிலைவகிக்க , சகோ.S.ரியாஸ் அஹமது கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். 
சகோ.அப்தாப் வரவேற்புரை வழங்க, முக்கிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் முறையே P.T.M சுல்தான் ஆரிப் சாஹிப் அவர்கள், பாவா ஜலால் அவர்கள் , பதுருதீன் அவர்கள், சாதிக் ராஜா அவர்கள் அழகிய முறையில் வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக H.S.M.ரஷீது அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
மற்றும் நாகூர் சகோதரர்கள் பலர் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
இறுதியாக நன்றியுரை வழங்கி ஃபரிஜால் அவர்கள் நிகழ்ச்சியை இனிதாக முடித்துவைத்தார்..
அல்ஹம்துலில்லாஹ்
இனிதாக முடிந்தது , புது நம்பிக்கை பிறந்தது...
ஜசாகல்லாஹ்.